அமெரிக்காவில் அரசியல் ஆலோசனை செய்த ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Monday,July 03 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னையில் ரசிகர்களை சந்தித்தபோது அரசியல் குறித்து சில பரபரப்பான கருத்துக்களை கூறினார். மேலும் தான் அரசியலுக்கு வருவது குறித்தும் மறைமுகமாக தெரிவித்தார். ரஜினியின் இந்த கருத்து தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என்று ஒரு தரப்பும், அரசியலுக்கு வரட்டும் என்று ஒரு தரப்பும் கருத்து தெரிவித்தன
இந்த நிலையில் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாது மும்பையின் ஜனநெருக்கடியான இடத்தில் 'காலா' படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவுக்கு உடல்பரிசோதனை செய்ய தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் சென்றுள்ளார்.
அமெரிக்கா செல்லும்போதெல்லாம் அங்குள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்வதும் அங்குள்ளவர்களிடம் சில முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்து அவர் ஆலோசனை செய்வது வழக்கம். இந்த நிலையில் தற்போது அவர் அரசியலில் இறங்குவது குறித்து ரஜினி அமெரிக்காவில் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் 'காலா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ரஜினி, பின்னர் மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த சந்திப்பின்போது தனது அரசியல் முடிவை அவர் பகிரங்கமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

மேற்குவங்கத்தில் ஜிஎஸ்டியில் தள்ளுபடி: திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி

ஜிஎஸ்டி வரி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரியால் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மேற்குவங்க மாநில அரசு திரையரங்க கட்டணத்தில் மாநில அரசின் சார்பில் தள்ளுபடி வழங்கியுள்ளது.

நாசர் குடும்பத்தினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி விஜய்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் பிரபல நடிகருமான நாசர் வீட்டுக்கு தளபதி விஜய் திடீர் விசிட் அடித்து நாசர் குடும்பத்தினர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

டிடிஎச் மூலம் திரைப்படங்கள் வெளியீடு: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி திட்டம்

உலக நாயகன் கமல்ஹாசன் தனது படங்களில் பின்னால் வரக்கூடியதை முன்கூட்டியே கூறியவர் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜல்லிக்கட்டு ஜூலியின் முதல் காதல் ஆல்பம்

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஊடகங்களின் பார்வையால் தமிழகம் முழுவதும் புகழ்பெற்றவர் ஜூலி.

மருத்துவமனையில் முக ஸ்டாலின்

திமுக செயல்தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.