'நாங்க மதுரையில் இருந்து வந்திருக்கோம்': ராஜஸ்தானில் ரஜினியை சுற்றி வளைத்த ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Monday,February 06 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தின் காரை சுற்றி வளைத்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படம் ஒரு உண்மையான பான் -இந்தியா திரைப்படம் என்ற வகையில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மலையாளத்தில் மோகன் லால், கன்னடத்தில் சிவராஜ்குமார், தெலுங்கில் சுனில் மற்றும் பாலிவுட்டில் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். அதுமட்டுமின்றி தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ’ஜெயிலர்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மார் என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்துக்கு ரஜினிகாந்தின் கார் வந்தபோது அந்த காரை ரசிகர்கள் சுற்றி வளைத்து அவருடன் செல்பி எடுக்க முயற்சித்தனர். அதில் ரசிகர்களில் ஒருவர் நாங்கள் மதுரையிலிருந்து வந்திருக்கிறோம் என்று கூறியபோது கார் கண்ணாடியை லேசாக இறக்கிய ரஜினிகாந்த் அவருக்கு கைகாட்டி தனது வாழ்த்தை தெரிவித்தார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

More News

எங்களுக்கு என்ன நடந்ததோ, அது அப்படியே அவங்களுக்கும் நடக்கணும்: 'வசந்த முல்லை' டிரைலர்

பாபிசிம்ஹா முக்கிய கேரக்டரில் நடித்த 'வசந்த முல்லை' என்ற திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி

உங்களால நாங்க நல்லா இருக்கணும், உங்களவிட நல்லா இருந்துடக்கூடாது.. கவினின் 'டாடா' டிரைலர்..!

கவின் நடித்த 'டாடா' திரைப்படம் வரும் வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகிய நிலையில் இந்த ட்ரெய்லர் வைரல் ஆகி வருகிறது.

'லியோ' புரமோ வீடியோவுக்கு கம்போஸ் செய்யும் அனிருத்.. வீடியோ வெளியிட்ட பிரபலம்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் டைட்டில் மற்றும் புரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதை தெரிந்தது

தனுஷ் படத்தை அடுத்து சிம்பு படத்தின் இசை வெளியீடு.. தேதி இதுதானா?

 தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலானது

தனுஷூக்கு பாட்டு பாட கற்று கொடுக்கும் இசைஞானி.. க்யூட் வீடியோ..!

நடிகர் தனுஷூக்கு பாட சொல்லிக் கொடுக்கும் இசைஞானி இளையராஜாவின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.