99.99 சதவிகிதம் ரஜினி அரசியலுக்கு வர மாட்டார். பிரபல காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Saturday,May 20 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பேச்சு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் கூறிய கருத்துக்களை அவ்வப்போது பார்த்து கொண்டு வருகிறோம். கிட்டத்தட்ட அனைவருமே அவர் அரசியலுக்கு வந்துவிடுவார் என்றே கூறி வருகின்றனர். ஒருசிலர் மட்டும் அவர் வரமாட்டார், வரவேண்டாம் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை' என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் பேசும்போது அரசியலுக்கு வருவது காலத்தின் கையில், ஆண்டவன் கையில் என்று 25 வருஷமா கூறி வருகிறார். நான் தீவிரமான சூப்பர் ஸ்டார் ரசிகன் என்ற முறையில் சொல்றேன். அவர் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை' என்று கூறியுள்ளார்.

மேலும் ரஜினி தனது படங்கள் வெளியாகும்போது மட்டும் அரசியல் குறித்து பேசுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து ஆர்ஜே பாலாஜி கூறியபோது, 'யாராவது புது ஹீரோ இப்படிப் பண்ணினால் 'ஸ்டன்ட்'னு சொல்லலாம். ஆனால், சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆச்சுன்னா, இந்தியா முழுவதும் உள்ள நியூஸ் சேனலில் 'why he is super star?'னு விவாதமே நடத்துறாங்க. 'ஷாரூக்கான்கிட்ட இல்லாதது, அமீர்கான்கிட்ட இல்லாதது, சூப்பர் ஸ்டார்கிட்ட என்ன இருக்கு?'னு விவாதிக்கிறாங்க. அதனால, படம் ஓடவைக்கணும்னு ஸ்டன்ட் மாதிரி எனக்குத் தெரியலை. ஆனா, 99.99 சதவிகிதம் ரஜினி, அரசியலுக்கு வர மாட்டார்' என்று கூறினார்.

More News

இந்த கிராமத்தில் பிறந்த அனைவரின் பிறந்த தேதியும் ஜனவரி 1. எப்படி தெரியுமா?

வருடத்தின் முதல் நாளான ஜனவரி 1ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடுவது என்பதே ஒரு தனி மகிழ்ச்சிதான்...

சிஸ்டம் கெட்டு போச்சு: ரஜினியின் கருத்துக்கு தம்பித்துரை பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று ரசிகர்களிடையே பேசியபோது, ஒருசிலதலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் அனைவரும் திறமையானவர்கள் தான்.

விஷாலின் வேலைநிறுத்த திட்டத்திற்கு மேலும் ஒரு தடை!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 1 முதல் ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று அறிவித்திருந்தார். விஷாலின் இந்த அறிவிப்புக்கு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகிஸ்தர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வழக்கம் போல் ஜூன் 1 முதல் திரையரங்க&#

சிம்புவின் 'AAA' படத்தின் முக்கிய கேரக்டரில் இயக்குனரின் தந்தை

சிம்பு நடித்து வரும் 'AAA' என்ற 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தின் முதல் பாகம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றது.