ரஜினியின் 'காலா' பட செட்டில் திடீர் விபத்து! ஒருவர் பரிதாப பலி

  • IndiaGlitz, [Thursday,June 22 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நடந்தது. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து பிற நடிகர்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த நிலையில் 'காலா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் பிரமாண்டமான செட் போடப்பட்டு வருகிறது. இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகளில் ஒருவர் திடீரென எதிர்பாராத நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த எதிர்பாராத விபத்து படக்குழுவினர்களையும் செட் போடும் மற்ற தொழிலாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 1980ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த காளி' படத்தின் படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமான தீ விபத்து ஏற்பட்டு ஸ்டண்ட் நடிகர்களும் குதிரைகளும் பலியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பார்வையற்ற மாணவர்களை பறக்க வைத்த கபாலி-பைரவா நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி', தளபதி விஜய் நடித்த 'பைரவா' படங்கள் உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த நடிகர் மைம்கோபி பார்வையற்ற மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்து அவர்களுடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார்....

விஜய்யின் சகோதர சகோதரி செண்டிமெண்ட் படங்கள்

இளையதளபதி விஜய் பேசும் வசனங்கள் என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது 'அண்ணா' என்பது தான்.

ஸ்ரேயா ரெட்டியின் 'அண்டாவ காணோம்' இசை, டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடித்த 'திமிறு', பிரகாஷ்ராஜ் நடித்த 'காஞ்சிவரம்', தங்கர்பச்சானின் 'பள்ளிக்கூடம்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி...

கார்த்திக் சுப்புராஜ் - பிரபுதேவா படத்தின் நாயகி இவரா?

பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படம் ஒன்று சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது...

மீண்டும் ஐரோப்பா செல்லும் அஜித்-விவேக் ஓபராய்

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்தில் சர்வைவா பாடல் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் சுனாமியை கிளப்பிய நிலையில் இந்த படத்தின் டப்பிங் உள்பட அனைத்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இரவுபகலாக விறுவிறுப்புடன் நடந்து வருகிறது...