ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லை: மீன் வியாபாரத்தை தொடங்கிய தமிழ் நடிகர்!

  • IndiaGlitz, [Sunday,September 27 2020]

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் இருந்த துணை நடிகர் ஒருவர் மீன் வியாபாரத்திற்கு மாறி உள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’, பாண்டிராஜ் இயக்கிய ’வெண்ணிலா கபடி குழு’ கேவி ஆனந்த் இயக்கிய ’கோ’ செல்வராகவன் இயக்கிய ’ஆயிரத்தில் ஒருவன்’ உள்பட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்தவர் மெய்யப்பன்

திண்டுக்கல்லைச் சேர்ந்த இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே சென்னை வந்து சினிமா வாய்ப்புகள் தேடி சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதை அடுத்து சென்னையில் இருந்து மீண்டும் சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு வந்து தற்போது மீன் வியாபாரம் செய்து வருகிறார்

தன்னிடம் இருந்த குறைந்த பணத்தில் பழைய ஆட்டோ ஒன்றை வாங்கி அதில் சில மாற்றங்கள் செய்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். காலையில் மீன் வியாபாரம் செய்து வருவதோடு மாலையில் சிக்கன் மீன் ஆகியவற்றை பொறித்து விற்பனை வருகிறார் என்பதும் உதவிக்கு தனது மகனை அவர் வைத்துள்ளதால் தனது குடும்பத்தை காப்பாற்றும் அளவுக்கு அதில் வருமானம் வருகிறது என்றும் மெய்யப்பன் தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தமிழ் நடிகர் ஒருவர் மீன் வியாபாரம் செய்து வருவதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது