சசிகலா முதல்வராக தடை கோரிய வழக்கு. சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

தமிழகத்தில் நடைபெற்று வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஒருபக்கம் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இன்னொரு பக்கம் சசிகலாவுக்கு அதரிச்சி தரும் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே உள்ளது.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த அதிர்ச்சியையே இன்னும் தாங்க முடியாத நிலையில் உள்ள சசிகலாவுக்கு தற்போது சுப்ரீம் கோர்ட் எடுத்துள்ள முக்கிய முடிவு ஒன்று மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது
சசிகலா முதல்வராக பொறுப்பேற்க தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக்கொண்டு நாளை இந்த வழக்கை விசாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் சசிகலா சம்பந்தப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை நாளை அல்லது திங்கள் அன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் இந்த வழக்கும் நாளை விசாரணணக்கு வரவுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.