பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,August 27 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சுரேஷ் சக்கரவர்த்தி என்பதும் இவர் முதல் சில வாரங்கள் மிக அருமையாக விளையாடினார் என்பதும் அதனை அடுத்து திடீரென யாரும் எதிர்பாராத வகையில் 35-வது நாளிலேயே போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் சுரேஷ் சக்கரவர்த்தி தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கும் அடுத்த படத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ஜேஎஸ்கே சதீஷ் குமார், ஷா ரா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

கே பாலச்சந்தர் இயக்கிய ’அழகன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த சுரேஷ் சக்கரவர்த்தி தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.