close
Choose your channels

எம்ஜிஆர் பேரன் கையால் அறுசுவை விருந்து சாப்பிட்ட பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி: வைரல் வீடியோ

Friday, July 30, 2021 • தமிழ் Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுரேஷ் சக்கரவர்த்தி என்பது தெரிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் எம்ஜிஆர் வேடம் அணிந்து நடித்ததற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் குவிந்தது என்பதும், எம்ஜிஆர் போலவே பாவனை செய்ததும், மேனரிசம் செய்ததையும் பார்க்கும்போது, அவரை எம்ஜிஆர் ஆகவே நாங்கள் பார்ப்பதாக பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் மற்றும் பேரன் ஆகியோர் ராமாவரம் தோட்டத்திற்கு சுரேஷ் சக்கரவர்த்தியை அழைத்து விருந்து அளித்துள்ளனர். இந்த விருந்தில் கலந்து கொண்ட சுரேஷ் சக்கரவர்த்தி இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் எம்ஜிஆரின் சிலைக்கு அவர் மரியாதை செலுத்திய காட்சிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பாட்டுக்கு நான் ஆடியதால் எனக்கு மிகப்பெரிய நல்ல பெயர் கிடைத்தது. எம்ஜிஆர் அவர்களின் வீட்டிற்கு என்னை சாப்பிட அழைத்ததற்கு மிகவும் நன்றி. எம்ஜிஆர் அவர்கள் எமனை எட்டி உதைத்து ’போடா’ என்று கூறியவர். ‘எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை எம்ஆர் ராதா அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று கூறிய மாமனிதன் எம்ஜிஆர் என சுரேஷ் சக்ரவர்த்தி அந்த வீடியோவில் கூறியுள்ளார். மேலும் எவ்வளவு நபர்கள் வந்தாலும் எம்ஜிஆர் நாமம் வாழும் என்று கூறிய சுரேஷ், இன்று பிரமாதமான சமையல் எனக்காக சமைத்து எனக்கு பரிமாறிய எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் மற்றும் பேரன் ஆகியோர்களுக்கு எனது நன்றி என்று சுரேஷ் சக்கரவர்த்தி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz