அஜித்துக்கு பிடித்த பொன்மொழி இதுதான்: சுரேஷ் சந்திராவின் பதிவு வைரல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் அஜித்துக்கு பிடித்த பொன்மொழி இதுதான் என அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவர் அஜித் என்பதும் அவரது ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியானது என்பதும் தெரிந்தது.
’விடாமுயற்சி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் ’குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் அவருக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு கிடைத்த சூப்பர் ஹிட் படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குவார் என்றும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போது அவர் முழுமையாக கார் ரேஸில் கவனம் செலுத்தி கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் நவம்பரில் தான் தொடங்கும் என்று அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் இந்த பொன்மொழி தான் அஜித்துக்கு மிகவும் பிடித்தது என்று பதிவு செய்துள்ளார். அந்த பொன்மொழி இதுதான்.
”எவ்வளவு கஷ்டப்பட்டு தியாகங்கள் செய்து வலியை தாங்குகிறாயோ, அந்த அளவுக்கு நீ வாழ்க்கையில் உயர்வாய்..”
One of Ajith Kumar’s favourite quotes ! pic.twitter.com/nCgqqb4yhx
— Suresh Chandra (@SureshChandraa) May 22, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com