திரைக்கு வரும் முன்பே சர்வதேச அங்கீகாரம் பெறுதல்.. சூரி படம் குறித்து சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சி..!

  • IndiaGlitz, [Tuesday,December 19 2023]

இயக்குனர் ராம் இயக்கத்தில் சூரி முக்கிய கேரக்டரில் நடித்த ’ஏழு கடல் ஏழு மலை’ என்ற திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள நிலையில் இந்த படம் ரோட்டர்டாம் உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

படைப்புகள் திரைக்கு வரும் முன்பே அங்கீகாரம் பெறுதல் பெரும் உற்சாகத்தை கொடுக்கும். அப்படியொரு மானசீக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் “ஏழு கடல் ஏழு மலை”, எனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராமின் அடுத்த படைப்பான 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'பிக் ஸ்கிரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியிருப்பது மிகுந்த உத்வேகத்தை கொடுக்கிறது.

வருகிற 2024 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறவுள்ள ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய போட்டி பிரிவான பிக் ஸ்கிரீன் விருதிற்கு பல உலகத் திரைப்படங்களோடு ‘ஏழு கடல் ஏழு மலை’ போட்டியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

இதை சாத்தியமாக்கிய நிவின் பாலி, அஞ்சலி, சூரி மற்றும் இசையில் எப்போதுமே நுணுக்கமாக விளையாடும் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவினை சிறப்பாகக் கையாண்டிருக்கும் ஏகாம்பரத்திற்கும், படத்திற்கு மிக பக்கபலமாக நின்ற ஆர்ட் டைரக்டர் உமேஷ் குமாருக்கும், ஸ்டன்ட் மாஸ்டர் ஸ்டன்ட் சில்வா மற்றும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நல்ல படைப்புகளுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வரும் ஊடகத்துறை நண்பர்களும் சினிமா ரசிகர்களும் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்திற்கும் உங்களின் ஆதரவையும் ஊக்கத்தையும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆண்டின் இறுதியில் இச்செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

சர்வதேச அளவில் முதல் முறையாக சிறப்புக்குரிய ஒரு விருதிற்கான தேர்வில் எமது நிறுவனத்தின் படைப்பை உலக அரங்கில் கொண்டு நிறுத்தியுள்ள எங்கள் இயக்குநர் ராமிற்கு முதல் நன்றி. நல்லவைகளை எதிர்பார்த்திருக்கும் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

இவ்வாறு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்,.

More News

'எல்.ஐ.சி' படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதனின் இன்னொரு படம்.. இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களா?

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்த 'லவ் டுடே' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது கோலிவுட்டின் பிசியான நட்சத்திரமாக மாறி உள்ளார்.

3 நாளில் இத்தனை கோடி வசூலா? இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற 'ஃபைட்கிளப்'

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவான 'ஃபைட்கிளப்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மூன்றே நாட்களில் ஐந்தே கால் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்திருப்பதாக

எப்படியாவது மீட்புப்பணியை மேற்கொள்ளுங்கள்: தென்மாவட்ட வெள்ளம் குறித்து பிரபல இயக்குனர்..!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் காரை தாக்கிய ரசிகர்கள்: அதிர்ச்சி வீடியோ..!

 பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய போட்டியாளர் காரை ரசிகர்கள் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பிக் பாஸ் நிர்வாகம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாமினேஷனில் வெறும் 3 போட்டியாளர்கள் மட்டுமே? திட்டம் போட்டு காப்பாற்றப்படுகிறார்களா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இந்த வாரம் வெறும் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே