20 வருடங்களுக்கு முன் அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? சுரேஷ் மேனன்

  • IndiaGlitz, [Monday,March 20 2017]

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் அஜித்தின் படங்கள் வெளியாகும் நாள் என்றாலே அவரது ரசிகர்களுக்கு திருவிழா போன்றதுதான். அவர் நடித்து வரும் 'விவேகம்' படத்திற்கு மிகப்பெரிய வியாபாரம் ஆகும் என்றும் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் சாதனை படைக்கும் என்றூம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 1993ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் தான் இயக்கிய 'பாசமலர்கள்' படத்தில் அஜித் நடித்தது குறித்து சமீபத்தில் நினைவுகூர்ந்தார். இன்று அஜித் சுமார் ரூ.25 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படும் நிலையில் 'பாசமலர்கள்' படத்தில் ஒருசில நிமிடங்கள் தோன்றும் காட்சிக்காக அவர் பெற்றது வெறும் ரூ.2500 சம்பளம்தான் என்றும், ஆனால் அதே நட்புறவுடன் இன்றும் அவர் இருப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும் சுரேஷ் மேனன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் மேனன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் ஜி.வி.பிரகாஷின் '4G' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

புதிய இயக்கம் தொடங்குகிறார் பிரபல இயக்குனர்

கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் என்ன நடக்கின்றது என்றே பலருக்கு புரியவில்லை.

தியாகராஜ கீர்த்தனைகளுக்கு ராயல்டி கொடுத்தீர்களா? இசைஞானிக்கு கங்கை அமரன் கேள்வி

இசைஞானி இளையராஜா தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பொதுமேடையில் பாடக்கூடாது என்றும் தவறினால் காப்புரிமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

'கட்டப்பாவ காணோ', 'குற்றம் 23' படங்களின் வசூல் விபரங்கள்

'நாய்கள் ஜாக்கிரதை', 'ஜாக்சன் துரை' ஆகிய இரண்டு தொடர் வெற்றிகளை அடுத்து சிபிராஜ் நடித்த 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகியது. இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றதால் சராசரி ஒப்பனிங் வசூலை இந்த படம் பெற்றுள்ளது...

சந்திரஹாசன் கனவுகளில் பாதியைக் கூட நிறைவேற்றவில்லை! கமல்ஹாசன் உருக்கம்

உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் நேற்று திடீரென காலமானதால் கமல்ஹாசனுக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...

எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன்? இளையராஜா தரப்பின் விளக்கம்

காப்புரிமை சட்டத்தின்படி தான் இசையமைத்த பாடல்களை எஸ்பிபி தான் இல்லாத மேடையில் பாடக்கூடாது என சமீபத்தில் இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். இந்த விவகாரம் குறித்து அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது....