close
Choose your channels

நடிகர் சித்தார்த்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை: இயக்குனர் தகவல்!

Sunday, September 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சித்தார்த்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அவர் நடித்த படத்தின் இயக்குனர் தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சித்தார்த் நடிப்பில் அஜய்பூபதி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’மகா சமுத்திரம்’. இந்த படத்தில் சித்தார்த்துடன் முக்கிய வேடத்தில் ஷர்வானந்த், அதிதிராவ், அனு இமானுவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா சமீபத்தில் நடந்த நிலையில் இந்த விழாவில் சித்தார்த் பங்கேற்கவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்த இயக்குனர் அஜய்பூபதி நடிகர் சித்தார்த் அவர்களுக்கு லண்டனில் அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற இருப்பதை அடுத்து அவரால் இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார்.

நடிகர் சித்தார்த்துக்கு திடீரென அறுவைசிகிச்சை ஏன் என அவரது ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு சித்தார்த் தனது சமூக வலைதளத்தின் மூலம் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.