close
Choose your channels

சூர்யாவின் 36வது படத்தை இயக்கும் கிளாசிக் இயக்குனர்

Friday, November 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'எஸ் 3' படம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் நடிக்கும் 35வது படமான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்ப்பு இன்று முதல் தொடங்குகிறது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்
இந்நிலையில் சூர்யாவின் 36வது படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. 'கார்த்தி நடித்த 'காஷ்மோரா' என்ற வெற்றி படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'சூர்யா 36' படத்தை செல்வராகவன் இயக்கவுள்ளார். சூர்யா-செல்வராகவன் முதன்முதலாக இணையும் இந்த படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாஸ் நடிகரும், கிளாசிக் இயக்குனரும் இணையும் இந்த படம் நிச்சயமாக தமிழ் சினிமாவின் வித்தியாசமான மற்றும் வெற்றி படமாக அமையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் பிற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.