'அப்பா' சிவகுமார் குறித்து 'மகன்' சூர்யா கூறியது இதுதான்.....

  • IndiaGlitz, [Tuesday,April 26 2016]
சமுத்திரக்கனி இயக்கி நடித்து தயாரித்துள்ள திரைப்படம் 'அப்பா'. இந்த படத்தை புரமோஷன் செய்யும் வகையில் நடிகர் சூர்யா இன்று இணையதளத்தில் பேசுவார் என்ற செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் சூர்யா தன்னுடைய அப்பாவின் பெருமைகள் குறித்து கூறியவற்றை தற்போது பார்ப்போம்.
என்னுடைய அப்பா கிராமத்தில் பத்தாவது வரை மட்டுமே படித்து, முதன்முதலாக கிராமத்தை விட்டு வெளியே வந்து, ஓவியராகி பின்னர் நடிகரானவர். எப்பொழுதுமே அவர் கூறும் ஒரு முக்கிய விஷயம் உன்னுடைய பெயரை மற்றவர்கள் ஞாபகம் வைத்துக்கொள்வதை விட உன்னுடைய பழக்கவழக்கங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.

எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல்நலம் குறித்த பயிற்சி கொடுத்தவர் அப்பாதான். காலையில் நான்கு மணிக்கு அனைவரையும் எழுப்பி பீச்சுக்கு அழைத்து சென்று சுத்தமான ஓசோன் காற்றை சுவாசிக்க செய்வார். இப்போதுகூட இரவு 9.30 மணிக்கு தூங்கி காலை 4 மணிக்கு எழுந்து வாக்கிங் செல்லும் பழக்கமுடையவர்.
அப்பா சொல்லிக்கொடுத்த இன்னொரு முக்கிய விஷயம் 'உனக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது. நமக்காக வேலை செய்பவர்களை நாம் கண்டிப்பாக மதிக்கவேண்டும் என்று அவர் சொல்லிக்கொடுத்ததை இன்றுவரை நாங்கள் அனைவரும் பின்பற்றி வருகிறோம்.
மேலும் யாரோடும் நம்மை ஒப்பீடு செய்யக்கூடாது என்று அப்பா சொல்லிக்கொடுத்த மற்றொரு முக்கிய அறிவுரை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும், யாருடைய வாழ்க்கையையும் உன் வாழ்க்கையோடு கம்பேர் செய்தால் வாழ்க்கையில் நிம்மதியாகவே இருக்க முடியாது என்று கூறுவார்.

மேலும் எந்த வேலையாக இருந்தாலும் யாரையும் எதிர்பாராமல் நம்முடைய வேலையை நாமே செய்யவேண்டும் என்பது அப்பா எங்களுக்கு கற்றுக்கொடுத்த மற்றொரு அறிவுரை. இன்று வரை அவர் வெளியே எங்காவது செல்வதாக இருந்தால் அவரே தன் கைப்பட எல்லாவற்றையும் எடுத்து வைப்பார்.
ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை புதியதாக ஏதாவது கற்றுக்கொண்டு, வாழ்க்கையை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்பது அப்பா கற்றுக்கொடுத்த இன்னொரு பழக்கம். எல்லா அப்பாக்களும் ஒரு நல்ல அப்பாவாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு உள்ளது. நானும் நல்ல அப்பாவாக இருக்க முயற்சி செய்கிறேன்'
இவ்வாறு தனது அப்பா குறித்து நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

More News

ரஜினி பட பாடலாசிரியருக்கு விஷால் செய்த உதவி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதில் இருந்தே நலிந்த நட்சத்திரங்கள் பலருக்கு நடிகர் சங்க நிர்வாகம் உதவி செய்து வருவதை...

ஜிப்ரானுக்கு கமலின் கின்னஸ் வாழ்த்து

கடந்த சில வருடங்களாக கமல்ஹாசன் நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்த பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் தற்போது சென்னை 2...

விஜய் பட வதந்திக்கு மறுப்பு தெரிவித்த நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கார்த்தியுடன் 'காஷ்மோரா' மற்றும் விக்ரமுடன் 'இருமுகன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்...

'தொடரி' டப்பிங்கை தொடங்கினார் தனுஷ்

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படமான 'தொடரி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட்...

சென்னை 600028' 2ஆம் பாகத்தில் நிஜ கிரிக்கெட் வீரர்கள்

சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே...