மீண்டும் இணைகிறதா துருவநட்சத்திரம்? புதிய தகவல்

  • IndiaGlitz, [Thursday,November 12 2015]

கடந்த 2013ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் திடீரென ஒருசில காரணங்களால் டிராப் ஆனது. இதனால் கவுதம் மேனன் -சூர்யா இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கவுதம் மேனன், 'ஒரு நண்பர் என்ற முறையில் சூர்யா, 'துருவ நட்சத்திரம்' படத்தில் இருந்து விலகியது எனக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், பழையதை மறந்துவிட்டு மீண்டும் இருவரும் இணைவதற்கு பேச்சு நடத்தி வருகிறோம். மிக விரைவில் சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்குவேன்' என்று கூறியுள்ளார்.

சூர்யா-கவுதம் மேனன் இணையும் இந்த படம் 'துருவ நட்சத்திரம்' படம் தானா? அல்லது முற்றிலும் வேறு ஸ்கிரிப்டா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவாரா விக்னேஷ் சிவன்?

தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது...

விஷாலின் 'சண்டக்கோழி 2' ஆரம்பம் எப்போது? விஷால் விளக்கம்

நடிகர் சங்க தேர்தலின் வெற்றிக்கு பின்னர் விஷால் தற்போது முழுவீச்சில் படப்பிடிப்புக்கு சென்று வருகிறார்...

மீண்டும் இணைகிறதா 'வேதாளம்' வெற்றி கூட்டணி?

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்து வருகிறது...

'பிரேமம்' தமிழ் ரீமேக் குறித்து தனுஷ் விளக்கம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாள படமான 'பிரேமம்' கேரளாவில் மட்டுமின்றி...

ரஜினியின் டைட்டிலில் ரெளடி நடிகர்?

கடந்த ஆயுதபூஜை தினத்தில் வெளியான விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து...