ரூ.100 கோடி கிளப்பில் சூர்யாவின் 'சி 3'. முழுவசூல் விபரங்கள்

  • IndiaGlitz, [Monday,February 27 2017]

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி 3' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல ஓப்பனிங் வசூல் கொடுத்த நிலையில் தற்போது இந்த படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்துள்ளது. மூன்றாவது வாரமாக சென்னை உள்பட முக்கிய நகரங்களில் நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 9ஆம் தேதி ரிலிஸ் ஆன இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூ.43 கோடி வசூலாகியுள்ளது. மேலும் ஆந்திராவில் ரூ.21 கோடியும், கேரளாவில் ரூ.8.3 கோடியும், கர்நாடகாவில் ரூ.9.7 கோடியும், வட இந்தியாவில் ரூ.1.5 கோடியும், வெளிநாடுகளில் ரூ.25 கோடியும் வசூலாகியுள்ளது. இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.108.5 கோடி என்றும் அதில் விநியோகிஸ்தர்களுக்கான பங்கு ரூ.60 கோடி என்றும் தகவல்கள் கூறுகின்றன.

More News

விஜய் ஆண்டனியின் 'எமன்' தமிழக வசூல் எவ்வளவு?

விஜய் ஆண்டனி நடித்த 'எமன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நெடுவாசல் உண்ணாவிரதத்தில் பிரபல இயக்குனர் பங்கேற்பு

புதுக்கோட்டை அருகில் உள்ள நெடுவாசல் பகுதியில் மீத்தேன் என்ற ஹைட்ரோகார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

ஆஸ்கர் சிறந்த படம் விருதில் திடீர் சொதப்பல். ஏமாற்றம் அடைந்த 'லா லா லேண்ட்' படக்குழு

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த சில மணி நேரமாக ஆஸ்கர் விருது வென்ற கலைஞர்கள், திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறந்த பட விருது அறிவிக்கப்பட்டதில் ஏற்பட்ட சொதப்பலால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது...

89வது ஆஸ்கார் விருதுகள்: வெற்றி பெற்ற கலைஞர்களின் பட்டியல்

உலக திரைப்பட விருது வழங்கும் விழாவில் முக்கியமானதும், ஒவ்வொரு திரை நட்சத்திரங்களின் கனவுமான ஆஸ்கார் விருது வழங்கும் விழா சிறிது நேரத்திற்கு முன்னர் தொடங்கி விருது பெற்றவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்