'ரெட்ரோ' லாபத்தில் இருந்து ரூ.10 கோடி.. சூர்யா செய்த மகத்தான செயல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ரெட்ரோ’ திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் முதல் நாள், முதல் காட்சி முடிந்தவுடன் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன.மேலும், கடந்த
இரண்டு நாட்களுக்கு முன்னால், இந்த படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை செய்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ’ரெட்ரோ’ படத்தில் கிடைத்த லாபத்தில் ரூ.10 கோடியை 'அகரம் அறக்கட்டளைக்கு நடிகர் சூர்யா வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ’ரெட்ரோ’ படத்தின் வெற்றி விழாவில் சூர்யா கூறியதாவது:
"பகிர்தல் என்பது மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு அடையாளம் கொடுத்து, என் முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய சமூகத்திடம் வெற்றியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
'ரெட்ரோ' திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவு மகிழ்ச்சியை அளித்துள்ளது. கடினமான சூழல் வரும் போதெல்லாம் உங்கள் அன்பும் ஆதரவும் என்னை நிலைத்தவனாக வைத்திருக்கிறது. அதற்காக அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் எனக்கு அளித்திருக்கும் அடையாளத்தை அர்த்தமுள்ளதாக மாற்றவே ‘அகரம்’ பவுண்டேஷன் தொடங்கப்பட்டது. அனைவரும் பங்களிப்பதன் மூலம் பல ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
அந்த வகையில், 'ரெட்ரோ' திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவின் மூலம் கிடைத்த தொகையில் ரூ.10 கோடியை இந்த கல்வியாண்டில் அகரம் அறக்கட்டளைக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உயர்கல்வி கனவோடு இருக்கும் மாணவர்களை அன்புடன் அரவணைப்போம். கல்வியே ஆயுதம்; கல்வியை கேடயம்!" இவ்வாறு சூர்யா கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments