சூர்யாவின் 'ஹைக்கூ' ஆடியோ மற்றும் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Thursday,August 20 2015]

'மாஸ்' படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் 'ஹைக்கூ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.


'ஹைக்கூ' திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் இம்மாத இறுதியிலும், செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவலை இயக்குனர் பாண்டியராஜ் தனது சமூக வலைத்தளத்திலும் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதால் காலாண்டு தேர்வு விடுமுறை காலமான செப்டம்பர் மூன்றாவது வாரத்தை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆடியோ ரிலீஸ் தேதியன்றே இந்த படத்தின் டிரைலரும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா மற்றும் அமலாபால் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் பிந்துமாதவி, கவின், நயனா, அபிமான், கார்த்திக் குமார், மற்றும் பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2D டெண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கரேலி இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவில், பிரவீன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் பாண்டியராஜின் 'பசங்க' படம் போல் ஒரு தரமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

முதல் இடத்தை நோக்கி செல்கிறது விஜய்யின் 'புலி'

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் டிரைலர் இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதை அதன் பார்வையாளர்களின்...

திருமணத்திற்கு பின்னர் மீண்டும் நடிக்க வரும் 'நய்யாண்டி' நடிகை

'நேரம்' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை நஸ்ரியா அதன் பின்னர் அட்லியின் முதல் படமான 'ராஜா ராணி'...

'புலி' டிரைலர் விமர்சனம்

கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வண்ணம் இன்று அதிகாலை மிகச்சரியாக 12 மணிக்கு இளையதளபதியின் "புலி' பட டிரைலர் இணையதளங்களிலும், ஒரு முன்னணி தொலைக்காட்சியிலும் ரிலீஸாகியது......

மீண்டும் கொல்கத்தாவில் அஜீத்-ஸ்ருதிஹாசன்

'என்னை அறிந்தால்' படத்தை அடுத்து அஜீத் நடித்து வரும் 'தல 56" படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொல்கத்தாவில் முடிவடைந்து தற்போது அடுத்தகட்டமாக...

'புலி' டிரைலர் குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' படத்தின் டிரைலர் இன்று நள்ளிரவு சரியாக 12மணிக்கு வெளியாகவுள்ளது...