சூர்யாவின் 'சி3' படத்தில் ஆங்கில பஞ்ச் வசனம்

  • IndiaGlitz, [Wednesday,February 01 2017]

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வரும் 9ஆம் தேதி இந்த படம் சுமார் 2000 திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் புதிய டீசர் தயாராகி உள்ளதாகவும், இந்த டீசரில் சூர்யா பேசிய ஆங்கில பஞ்ச் டயலாக் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டதால் ஆங்கில வசனங்கள் அதிகம் இருக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆங்கிலத்தில் பஞ்ச் வசனங்களும் உள்ளது என்ற தகவல் சூர்யாவின் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி, தாகூர் அனுப்சிங், சரத் சக்சேனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

More News

மீண்டும் இணையும் ராஜேஷ்-சந்தானம் கூட்டணி

பிரபல இயக்குனர் ராஜேஷின் முதல் படமான 'சிவா மனசில சக்தி' படம் முதல் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படம் வரை ஹீரோவுக்கு இணையான கேரக்டரில் நடித்தவர் சந்தானம். தற்போது சந்தானம் ஹீரோவாக புரமோஷன் பெற்றுவிட்டதால் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தில் அவர் நடிக்கவில்லை

'விஜய் 61' படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு தகவல்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

சட்டமன்றத்தில் முதல்வர் காட்டிய பின்லேடன் படம் எங்கு எடுக்கப்பட்டது? திடுக்கிடும் தகவல்

சென்னை மெரீனாவில் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே வன்முறை வெடித்ததாகவும் அரசு தரப்பிலும் காவல்துறையினர் தரப்பிலும் கூறப்பட்டது.

தேவைப்பட்டால் அரசியலுக்கு வரத்தயார். ராகவா லாரன்ஸ்

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பம் முதல் கடைசி வரை பெரும் ஆதரவு கொடுத்தவர்களில் முக்கியமானவர் நடிகர் லாரன்ஸ்.

மெரீனா வன்முறைக்கு விசாரணை கமிஷன். ஓய்வுபெற்ற நீதிபதியை நியமனம் செய்த முதல்வர்

சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்தின் கடைசி தினத்தில் நடந்த வன்முறையால் மாணவர்கள், பொதுமக்கள் குறிப்பாக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்...