close
Choose your channels

'நானா தானா வீணா போனா' சூர்யாவின் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Thursday, July 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சூர்யாவின் பிறந்த நாளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் இயக்குனர் விக்னேஷ் சிவனே எழுதிய நிலையில் அவற்றில் ஒரு பாடலான 'நானா தானா வீணா போனா' என்று தொடங்கும் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாக விக்னேஷ் சிவனின் சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 'என்னுடைய கோட்டையில் இருந்து நேராக அனிருத்தின் இதயத்திற்கு சென்ற பாடல் இது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 'நானும் ரெளடிதான்' படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த விக்னேஷ்-அனிருத் கூட்டணி இந்த படத்திலும் அதேபோல் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, கீர்த்திசுரேஷ், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் கார்த்திக், செந்தில், சுரேஷ்மேனன் ஆகியோர் மீண்டும் முக்கிய கேரக்டர்கள் மூலம் ரீஎண்ட்ரி ஆகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.