அஜீத்துக்கு வில்லனாகிய சூர்யாவின் வில்லன்?

  • IndiaGlitz, [Thursday,August 20 2015]

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிபு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் அஜீத் டாக்சி டிரைவராகவும், ஸ்ருதிஹாசன் வழக்கறிஞராக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


இந்த படத்தில் மெயின் வில்லன் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் கபீர்சிங் நடித்து வரும் நிலையில் இன்னும் ஒரு புதிய வில்லனும் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சூர்யா நடித்த 'ஆதவன்' படத்தில் வில்லனாக நடித்த ராகுல்தேவ் 'தல 56" படத்தில் புதிய வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அஜித்துடன் இணைந்து நடிப்பது எனக்கு பெருமையாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என ராகுல் தேவ் கூறியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை விரைவில் வெளியிட படக்குழுவினர் முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இளையதளபதியின் 'புலி' டிரைலர் எப்படி இருக்கு? உங்கள் கருத்து என்ன?

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் டிரைலர் இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது...

அர்ஜூனுடன் முதல்முறையாக இணைகிறார் பாபிசிம்ஹா

பிரசன்னா, சினேகா நடித்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தின் இயக்குனர் அருன் வைத்தியநாதனின் அடுத்த படத்தில் அர்ஜூன்...

சூர்யாவின் 'ஹைக்கூ' ஆடியோ மற்றும் ரிலீஸ் தேதி

'மாஸ்' படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் 'ஹைக்கூ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்...

முதல் இடத்தை நோக்கி செல்கிறது விஜய்யின் 'புலி'

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் டிரைலர் இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதை அதன் பார்வையாளர்களின்...

திருமணத்திற்கு பின்னர் மீண்டும் நடிக்க வரும் 'நய்யாண்டி' நடிகை

'நேரம்' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை நஸ்ரியா அதன் பின்னர் அட்லியின் முதல் படமான 'ராஜா ராணி'...