சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி படத்தின் டைட்டில் இதுதான்: மிரட்டும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி படத்தின் டைட்டில் இதுதான்: மிரட்டும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
நடிகர் சூர்யாவின் 45-வது திரைப்படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்.ஜே. பாலாஜி இந்த படத்தை ஒரு நீதிமன்ற வழக்கின் பின்னணியில் உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. இதில், பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகை திரிஷா மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
இவர்களுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு சாய் அபிநயங்கார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், படத்தின் டைட்டில் 'கருப்பு' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டைட்டிலுடன் வெளியான இந்த அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முன்னதாக, இந்த படத்திற்கு 'வேட்டை கருப்பு' என்ற தலைப்பு வைக்கப்படலாம் என செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
Here’s our #Karuppu for you..!
— Suriya Sivakumar (@Suriya_offl) June 20, 2025
Wishing you all happiness @RJ_Balaji #கருப்பு@trishtrashers @dop_gkvishnu @SaiAbhyankkar @natty_nataraj #Indrans #Swasika @prabhu_sr@DreamWarriorpic pic.twitter.com/a7YQ3l0NS7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com