close
Choose your channels

'சிங்கம் 3' படப்பிடிப்பு தொடங்கும் தேதி

Wednesday, December 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் ஜனவரி 10ஆம் தேதி விக்ரம்- நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அதாவது ஜனவரி 7ஆம் தேதி சூர்யா நடிப்பில் ஹரி இயக்கும் 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


சிங்கம், சிங்கம் 2' படங்களை அடுத்து 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கனமழை காரணமாக படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு வரும் 7ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டணத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.