உருமாறிய கொரோனாவால் சென்னைக்கும் பாதிப்பா??? சுகாதாரத்துறை விளக்கம்!!!

  • IndiaGlitz, [Thursday,December 24 2020]

 

டிசம்பர் 21 ஆம் தேதி பிரிட்டனில் இருந்து சென்னைக்கு திரும்பிய ஒரு மாணவருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டது. இந்நிலையில் பிரிட்டனில் புதிதாகப் பரவிவரும் அதிவேக கொரோனா வைரஸ் பாதிப்பு இவரைத் தாக்கி இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவரின் ரத்த மாதிரிகள் அடுத்தக்கட்ட ஆய்விற்காக பூனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது எனத் தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருந்தது.

அந்த ரத்த மாதிரிகளின் முடிவு வரும் திங்கள் கிழமைதான் தெரியவரும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் பிரிட்டனில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தமிழகச் சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் காஞ்சிபுரம் தாலுகாவை சேர்ந்த அந்த 7 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நவம்பர் மாதத்தில் பிரிட்டனில் இருந்து 328 பேர் தமிழகத்திற்கு வந்ததாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர் என்றும் தமிழகச் சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கிடைக்கப் பெற்றதற்கு பின்புதான் பயணத்திற்கு அனுமதிக்கப் படுகின்றனர். இப்படி இருந்தும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 800 பேர் பிரிட்டனில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர். அவர்களும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் விளக்கம் அளித்து உள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என்ற கோணத்தில் தமிழகச் சுகாதாரத்துறை அவர்களின் ரத்தமாதிரிகளை சேகரித்து உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

More News

'நாளை நமதே' வாக்கியம் அவர் தந்தது: எம்ஜிஆர் நினைவு நாளில் கமல் டுவீட்!

உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி  மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தற்போது தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

என்னை திட்டவோ, அணைக்கவோ கமலுக்கு உரிமை உண்டு: நடிகை-அரசியல்வாதி பேட்டி

கமல்ஹாசன் அவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர், அவருக்கு என்னை திட்டவோ அணைக்கவோ உரிமை இருக்கிறது என சமீபத்தில் பேட்டியளித்த நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தெரிவித்துள்ளார்

சிம்புவின் அடுத்த படத்திற்கு 'தல' டைட்டில்!

சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த டைட்டிலை 10 இயக்குனர்களை இணைந்து அறிவிக்க உள்ளதாகவும்

கிறிஸ்துமஸ் ரிலீஸில் இருந்து பின்வாங்கிய திரைப்படம்: காரணம் இதுதான்!

கிறிஸ்துமஸ் தினமான நாளை மாஸ் நடிகர்களின் படங்கள் எதுவும் வெளிவராத நிலையில், ஒருசில சின்னபட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

ரியோவை ஜீரோவாக்கிய ரம்யா, கேபியை டார்கெட் செய்த பாலா: இறுதிக்கட்டத்தில் பந்து டாஸ்க்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த பந்து டாஸ்கில் நேற்று பிக் பாஸ் இதுவரை விளையாடிய வரையில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான ரேட்டிங்கை தேர்வு செய்யுமாறு தெரிவித்து இருந்தார்.