close
Choose your channels

சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம விருந்து!

Friday, July 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் பிறந்த நாள் வரும் 23-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினம் ரசிகர்களுக்கு செம விருந்து ஒன்று காத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 40’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யாவின் 46வது பிறந்தநாள் வரும் ஜூலை 23ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினம் ’சூர்யா 40’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று செய்திகள் கசிந்து உள்ளது. எனவே சூர்யாவின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிபி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி இமான் இசையில் உருவாகிவரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.