close
Choose your channels

சுழன்று சுழன்று பறந்து பறந்து அடிக்கும் நடிகை.. 'சூர்யா 42' படத்தில் செம விருந்து காத்திருக்கு?

Tuesday, February 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’சூர்யா 42’ படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை திஷா பதானி தனது சமூக வலைதளத்தில் சுழன்று சுழன்று பறந்து பறந்து அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாக்கி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ’சூர்யா 42’. இந்த படம் தமிழ் ஹிந்தி உள்பட 13 மொழிகளில் உருவாகி வருவதாகவும் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படம் முதல் பாகம் வெளியான பின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா மிகவும் வித்தியாசமான கேரக்டர்களில் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை திஷா பதானிக்கு ஸ்டண்ட் காட்சிகளும் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திஷா பதானி சுழன்று சுழன்று பறந்து பறந்து அடிக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவை அவரது 56 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள்ரசித்து வருகின்றனர் என்பதும் அதில் ஒருவர் நடிகை சமந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.