அதற்குள் ரூ.100 கோடிக்கு வியாபாரமா? 'சூர்யா 42' படத்தின் ஆச்சரிய தகவல்!

  • IndiaGlitz, [Monday,January 02 2023]

சூர்யா நடித்துவரும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் தொடங்கிய நிலையில் அதற்குள் நூறு கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ’சூர்யா 42’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த படத்தில் சூர்யா 13 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை பிரமாண்டமாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது என்று ஏற்கனவே பார்த்தோம்.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் சரித்திர கதையம்சம் கொண்டது. மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’சூர்யா 42’ படத்தின் ஹிந்தி வெளியீட்டு உரிமை மற்றும் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை மட்டும் 100 கோடி ரூபாய்க்கு பென் ஸ்டுடியோ நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த தகவல் உண்மையாக இருந்தால் ’சூர்யா 42’ படம் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

முதல் நாளே தூள்.. 'தளபதி 67' படப்பிடிப்பு ஆரம்பமானதை உறுதி செய்த பிரபல நடிகர்!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று

நடிகர் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகான மகள்களா? வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் குணசித்திர நடிகரான லிவிங்ஸ்டன் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவருக்கு இவ்வளவு அழகான மகள்களா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 

முழுக்க முழுக்க பொய்.. யாரும் இதை நம்ப வேண்டாம்: போனிகபூர் டுவிட்

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் அந்த படத்தை வெளியிடும் பரபரப்பில் உள்ளார் என்பதும் இந்த படத்திற்கான இறுதிகட்ட புரமோஷன்

2 முறை விவாகரத்து ஆன நடிகையை 4வது திருமணம் செய்யும் பிரபல நடிகர்.. வைரலாகும் லிப்லாக் வீடியோ

ஏற்கனவே 3 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்த பிரபல நடிகர் ஒருவர் நான்காவது திருமணம் செய்ய உள்ளதாகவும் அவர் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நடிகையை திருமணம்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒரு சாதனை:  சென்னை மக்களுக்கு நன்றி சொன்ன போக்குவரத்து காவல்துறை!

 ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் சென்னையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் நள்ளிரவு 12 மணி முதல் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் என்றும் தெரிந்ததே.