'சூர்யா 42' படத்தின் பூஜை நாள் இதுதான்: ரசிகர்கள் குஷி!

  • IndiaGlitz, [Saturday,August 20 2022]

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது என்ற செய்தியை கடந்த சில மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த செய்தி தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. ‘சிங்கம்’ படத்திற்கு பிறகு மீண்டும் தேவிஸ்ரீபிரசாத் சூர்யாவின் படத்தை இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை சென்னையில் ஆகஸ்ட் 21ம் தேதி அதாவது நாளை நடைபெற இருப்பதாகவும் நாளை இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சூர்யா, இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ’வணங்கான்’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 42’ படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

த்ரிஷா குறிப்பிடும் அந்த 'குப்பை' நபர் யார்? ரசிகர்கள் குழப்பம்!

நடிகை த்ரிஷா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் குப்பை நபர் என்று ஒருவரை குறிப்பிட்டு ஆத்திரத்துடன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த குப்பை நபர் யார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

வைரலாகும் அம்மாவுடன் த்ரிஷா இருக்கும் குழந்தை புகைப்படம்!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வருபவர் த்ரிஷா என்பதும் நடிகை ஒருவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக திரையுலகில் நடித்து வருவது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது

கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இரட்டை குழந்தைகள்: விஜய், அஜித் பட நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகைக்கு நேற்று கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ

யாஷிகாவின் வெறித்தனமான வொர்க்-அவுட்: வேற லெவலில் வைரலாகும் வீடியோ

நடிகை யாஷிகா வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.

லைகாவின் 'பொன்னியின் செல்வன்': ஆதித்த கரிகாலனின் 'சோழா சோழா' பாடல் ரிலீஸ்

லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படத்தை மணிரத்னம் இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும்