close
Choose your channels

'சூர்யா 42' டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது? செம அப்டேட்டை வெளியிட்ட படக்குழு..!

Monday, March 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் படக்குழுவினர்களிடமிருந்து வந்த உறுதி செய்யப்பட்ட தகவலின்படி ’சூர்யா 42’ படத்தின் டைட்டில் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இந்த அறிவிப்பில் ரிலீஸ் தேதியும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து மே மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அந்த டீசரில் இந்த படம் எவ்வளவு பிரம்மாண்டமான படம் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளலாம் என்றும் பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 13 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் சூர்யா 10க்கும் மேற்பட்ட கெட்டப்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.