close
Choose your channels

சூர்யாவின் 46வது படத்தின் பூஜை.. மலையாள ஹீரோயின், பாலிவுட் பிரபல நடிகை..!

Monday, May 19, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யாவின் 46வது படத்தின் பூஜை இன்று நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தின் நாயகி மற்றும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இரண்டு பிரபலங்களை பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளன.

சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், அவர் தற்போது ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 45' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சூர்யாவின் 46வது திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் சூர்யா உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தை வெங்கி அட்லுரி இயக்குகிறார். இவர் ஏற்கனவே தனுஷின் ‘வாத்தி’ துல்கர் சல்மான் நடித்த ’லக்கி பாஸ்கர்’ உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படத்தில் மமிதா பாஜூ நாயகியாக நடிக்க இருப்பதாகவும், பாலிவுட் பிரபல நடிகை ரவீனா டண்டன் மற்றும் ராதிகா ஆகியோர் இந்த படத்தில் ஒரு முக்கியக் கேரக்டர்களில்ல் ந நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இம்மாதம் 30ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment