close
Choose your channels

நேரடி தெலுங்கு படத்தில் சூர்யா? இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா?

Wednesday, July 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்கள் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் திரைப்படங்களிலும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்கள் தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகும் படங்களிலும் நடித்து வருவார்கள் என்பதை பார்த்து வருகிறோம்

குறிப்பாக விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் அனைத்து திரைப்படங்களும் தெலுங்கு மாநிலங்களில் ஹிட்டாகி வரும் நிலையில் அவரும் தமிழ், தெலுங்கில் தயாராகும் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’வணங்கான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ மற்றும் 'ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனம் யூவி கிரியேஷன் தயாரிப்பில் பிரபல இயக்குனர் ’சூர்யம்’ சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும், தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.