close
Choose your channels

பிரபல இயக்குனர்களின் கனவு படங்களில் சூர்யா: ஆச்சரிய ஒற்றுமை!

Monday, September 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களின் கனவு படங்கள் அனைத்திலும் சூர்யா நாயகனாக நடித்து வரும் ஆச்சரியமான ஒற்றுமை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா மற்றும் பா ரஞ்சித் ஆகிய நான்கு இயக்குநர்களின் கனவு படங்களிலும் சூர்யா நடித்து வருகிறார் மற்றும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் கனவு படம் சரித்திர கதையம்சம் கொண்ட ’சூர்யா 42’. இந்த படத்தில் சூர்யா 5 கேரக்டர்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் வெற்றிமாறன் பல அதிரடி ஆக்சன் திரைப்படங்களை எடுத்து இருந்தாலும் அவருடைய கனவு படம் ஜல்லிக்கட்டு கதையம்சம் கொண்ட ’வாடிவாசல்’. இந்த படத்திலும் சூர்யா ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

அதேபோல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது பேட்டியில் தனது கனவு படம் ’இரும்புக்கை மாயாவி’ என்று கூறிய நிலையில் இந்த படத்திலும் சூர்யா தான் நடிக்க உள்ளார். இந்த படம் தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தாலும் விரைவில் உருவாகும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் பா ரஞ்சித் தனது வாழ்க்கையின் கனவு படம் ’ஜெர்மன்’ என்றும் கூறியுள்ள நிலையில் அந்த படத்திலும் சூர்யா தான் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பாலாவின் கனவு படமான ’வணங்கான்’ படத்திலும் சூர்யா நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. மொத்தத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் கனவு படங்கள் அனைத்திலுமே சூர்யா ஹீரோவாக நடித்து வருவது ஆச்சரியமான ஒற்றுமை என திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos