close
Choose your channels

'அருவா' படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடமா? பரபரப்பு தகவல் 

Tuesday, March 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கும் படத்தின் டைட்டில் ’அருவா’ என்று கடந்த ஞாயிறன்று அதிகாரப்பூர்வமாக வெளி வந்தது தெரிந்ததே. டி இமான் இசையில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் ’அருவா’ படத்தின் கதை குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படம் இரண்டு சகோதரர்கள் இடையே நடக்கும் உணர்ச்சிகரமான போராட்டம் தான் கதை என்று கூறப்படுகிறது. இதனை ஹரியின் தரப்பும் உறுதி செய்துள்ளது. எனவே இந்த படத்தில் இரட்டை சகோதரர்களாக சூர்யாவே இரட்டை வேடத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஹரி இயக்கிய ’வேல்’ படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் சகோதரராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக இருந்தாலும் சிங்கம் சீரிஸ் போல் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்காது என்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்த அதிரடி ஆக்ஷன் படம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அனல் அரசு இந்த படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தென் தமிழ்நாட்டில் நடைபெற இருப்பதாகவும் குறிப்பாக ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos