close
Choose your channels

ஒரு உண்மையை ஒத்துக்குறாங்கன்னா, பல உண்மைகளை மறைக்குறாங்கன்னு அர்த்தம்: 'ஜெய்பீம்' டிரைலர்

Friday, October 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜெய்பீம்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள் மற்றும் டீசர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த ட்ரெய்லரில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாதாடும் சூர்யாவின் நீதிமன்ற காட்சிகளும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள் கொண்ட காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகளை பார்க்கும்போது இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடந்த அராஜகத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடி வரும் சூர்யா இது குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று கூறுகிறார். போலீசார் ஒரு உண்மையை ஒப்புக் கொண்டார்கள் என்றால் பல உண்மைகளை மறைக்கிறார்கள் என்று அர்த்தம் என்றும் அவர் வாதாடுவது படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, பிரகாஷ் ராஜ், ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீன் ரோல்டன் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரை தற்போது காணுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.