ரம்ஜான் வாழ்த்துக்களுடன் 'ரெட்ரோ' புதிய போஸ்டர்.. சூர்யாவின் அட்டகாசமான லுக்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வரும் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பணிகளும் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அவ்வப்போது இந்த படத்தையும் புரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக காமிக் வடிவில் வெளியாகும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று ரம்ஜான் தினத்தை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அட்டகாசமாக மற்றும் ஆவேசமாக சூர்யா லுக் இருக்கும் நிலையில் இந்த ஸ்டில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
May the sweetness of Eid fill your heart and home with peace and happiness 🌙✨
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) March 31, 2025
Team #Retro wishes you all a One-derful Eid 🤍#EidMubarak #RetroFromMay1 #LoveLaughterWar@Suriya_Offl #Jyotika @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @prakashraaj @C_I_N_E_M_A_A pic.twitter.com/4bSBECZxJl
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments