close
Choose your channels

மெல்போர்ன் விருதுக்கு தேர்வாகியுள்ள சூர்யாவின் சூப்பர்ஹிட் படம்!

Thursday, August 5, 2021 • தமிழ் Comments

சூர்யா நடித்த சூப்பர் ஹிட் படம் ஒன்று மெல்போர்ன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

மெல்போர்ன் இந்திய திரைப்பட விருதுகள் விழா விரைவில் நடைபெற உள்ளதை அடுத்து இந்த விருதுக்கு தகுதி பெற்ற படங்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தமிழில் வெளியான சேத்து மான்’, ’நஸீர் படங்கள் மற்றும் மலையாளத்தின் ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் சிறந்த படங்கள் விருதுக்கு போட்டியிடுகின்றன.

அதேபோல் சிறந்த இயக்குனர் பிரிவில் ’சூரரைப்போற்று’ இயக்குனர் சுதா கொங்கரா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் பிரிவில் ’சூரரைப்போற்று’ படத்தில் நடித்த சூர்யா பெயர் பரிந்துரை உள்ளது என்பதும், சிறந்த நடிகை விருது பிரிவில் வித்யா பாலன் உள்பட ஒருசில நடிகைகளில் பெயர்கள் பரிந்துரையில் உள்ளது.

இந்த ஆண்டு முதல் வெப்சீரிஸ்களுக்கும் சிறந்த நடிகர், நடிகை, சீரிஸ் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த நடிகை பிரிவில் ’தி பேமிலிமேன் 2’ சீரிஸில் நடித்த சமந்தா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விருது விழா விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் சூர்யா மற்றும் சமந்தாவுக்கு விருது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Get Breaking News Alerts From IndiaGlitz