சூர்யா-சிறுத்தை சிவா படத்தின் நாயகி இவரா?

சூர்யா நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்’ என்ற திரைப்படம் உருவாகி கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது சூர்யா- சிறுத்தை சிவா இணையும் படத்தில் நாயகியாக நடிக்கக் கூடியவர் யார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தில் திஷா படானி நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உள்பட பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள திஷா படானி இந்த படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி ஆவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


More News

பொண்ணும் பொண்ணும், பையனும் பையனும் லவ் பண்ணக்கூடாதா? 'நட்சத்திரம் நகர்கிறது' டிரைலர்

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நான் உண்மைய சொன்னா பிடிக்காது, பொய் சொன்னா நல்லவன், ஜெண்டிமேன்: 'டூடி' டிரைலர்

கார்த்திக் மதுசூதனன் நடிப்பில் உருவாகி 'டூடி' என்ற திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தனுஷ் படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டு உடைத்த ரகசியம்!

தனுஷ் நடித்த ஹிட் படத்தின் ரகசியத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் போட்டு உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

எனக்கு திருமணம் என்பது உண்மைதான்: மனம் திறந்த கௌதம் கார்த்திக்!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் விரைவில் திருமணம் செய்யப் போகிறார் என்றும் குறிப்பாக நடிகை மஞ்சிமா மோகனை அவர் காதலித்து வருவதாகவும்,

சாண்டியுடன் வீடியோ வெளியிட்டு மச்சினிச்சி பெருமிதம்!

நடன இயக்குனர் சாண்டியுடன் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவரது மச்சினிச்சி இந்த வீடியோ குறித்து பெருமிதம் கொள்வதாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது