close
Choose your channels

சூர்யா-சிறுத்தை சிவா படத்தின் நாயகி இந்த பிரபலமா? ரசிகர்கள் உற்சாகம்!

Sunday, July 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 41’ படத்தின் அடுத்த கட்டப்படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பார் என்றும் அதன் பிறகுதான் ’வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சூர்யா - சிறுத்தை சிவா படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக ’பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பீஸ்ட் படத்திற்கு பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் கமிட் ஆகாத பூஜாவுக்கு சூர்யா பட வாய்ப்பு கிடைக்க இருப்பதை அடுத்த் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.