close
Choose your channels

ஒரே நாளில் வெளியாகிறதா சூர்யா-சிவகார்த்திகேயன் திரைப்படங்கள்

Saturday, August 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தீபாவளி, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற திருவிழா நாட்களில் பிரபலங்களின் திரைப்படங்கள் மோதுவது வழக்கமானதே. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் திரைப்படங்களாக தனுஷின் 'மாரி 2', ஜெயம் ரவியின் 'அடங்கமறு', சிவகார்த்திகேயனின் 'கனா', விஷ்ணுவிஷாலின் 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' மற்றும் விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' என ஐந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானது

இந்த நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் திரைப்படங்களாக சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. சூர்யா நடித்து வரும் 'சூரரை போற்று' மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'நம்ம வீட்டு பிள்ளை' ஆகிய இரண்டு திரைப்படங்களும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது. இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் இரண்டு படங்களும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது

சூர்யாவின் 'சூரரை போற்று' திரைப்படம் 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருக்கும் இந்த படம் இயக்குனரின் முந்தைய படமான 'கடைக்குட்டி சிங்கம்' போன்ற ஒரு கூட்டுக்குடும்ப விவசாய சம்பந்தப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.