close
Choose your channels

முதன்முதலாக இணையும் சூர்யா-எஸ்.ஜே.சூர்யா

Sunday, December 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர்கள் சூர்யா, எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் இதுவரை இணைந்து பணியாற்றியதில்லை என்ற நிலையில் முதல்முதலாக தற்போது இருவரும் இணைந்துள்ளனர். ஆனால் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்கவில்லை என்பதும் இருவரும் ஒரே தயாரிப்பாளர் தயாரிக்கும் படங்களில் தனித்தனியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் வெளியான 'ஸ்பைடர்' மற்றும் 'மெர்சல்' ஆகிய இரு படங்களிலும் தனது சிறப்பான வில்லன் நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்ற நிலையில் தற்போது ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தை 'ஒருநாள் கூத்து' இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார்.

அதேபோல் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கவுள்ள படத்தையும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தையும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்திலும் சூர்யா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.