close
Choose your channels

'வாடிவாசல்' ரிலீஸ் எப்போது? கலைப்புலி தாணு அப்டேட்டால் சூரியா ரசிகர்கள் குஷி..!

Thursday, April 17, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் பேட்டி அளித்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள், இந்த படத்தின் ரிலீஸ் தகவல் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வெற்றிமாறனும் நானும் சூர்யா தம்பியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தோம். இந்த சந்திப்பில் எந்தெந்த தேதியை ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன் பிறகு, வெற்றிமாறனை தனியாக சந்தித்த சூர்யா, எந்தெந்த தேதியில் படப்பிடிப்பு வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனை செய்தார்.

அதுமட்டுமின்றி, வெற்றிமாறனும் ஜிவி பிரகாஷும் சந்தித்து, ஒரு பாடலை கம்போஸ் செய்து ஒலிப்பதிவும் முடித்துவிட்டனர். இதனை அடுத்து, படப்பிடிப்பு தொடங்கும் நாளும் திட்டமிடப்பட்டுவிட்டது.

அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில், இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம் என்று கலைப்புலி தாணு கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா தற்போது, ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 45’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், ’வாடிவாசல்’ படத்தில் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment