உதவியாளர் சம்பளம்: சூர்யா-விஷால் எடுத்த அதிரடி முடிவுக்கு வரவேற்பு

  • IndiaGlitz, [Saturday,March 24 2018]

கடந்த சில நாட்களாக ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க தினமும் ஒரு சங்கத்திடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சங்கத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை செய்தது. இந்த ஆலோசனன கூட்டத்தில் தயாரிப்பாளர்களின் செலவை குறைக்கும் வகையில் நடிகர்களின் உதவியாளர்களுக்கு ஃபெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. அதற்கு மேல் உதவியாளர்களின் செலவு ஆனால், அந்த தொகையை நடிகர்களே வழங்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் நடிகர் சூர்யா, தனது உதவியாளரின் முழு செலவையும் தானே ஏற்பதாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து விஷால் மற்றும் கார்த்தியும் தங்கள் உதவியாளர்களின் செலவை தாங்களே ஏற்று கொள்வதாக அறிவித்தனர்.

இதே போல் அனைத்து நடிகர்களும் தங்களுடைய உதவியாளரின் செலவை ஒப்புக்கொண்டால் தயாரிப்பாளர்களுக்கு ரூ.20 லட்சம் அளவில் தயாரிப்பு செலவு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா, விஷால், கார்த்தியின் இந்த முடிவுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் பாராட்டு தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரை போல் மற்ற நடிகர்களும் தங்களுடைய உதவியாளர்களின் செலவை அவர்களே ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் சந்திப்பில் நடந்த முக்கிய ஆலோசனை என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள நிலையில் நேற்று ரஜினியின் அழைப்பை ஏற்று கார்த்திக் சுப்புராஜ்,

லாலு பிரசாத் யாதவுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை: நீதிமன்றம் அறிவிப்பு

முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மீதான மூன்று கால்நடை தீவன வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு அளிக்கப்பட்டு அவர் சிறையில் இருக்கும் நிலையில்

சிஸ்டம் புரியாதவர், கருத்து கந்தசாமி: ரஜினி, கமலை மறைமுகமாக தாக்கிய ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நலம் காரணமாக தமிழகத்தில் சக்தி வாய்ந்த தலைவர்கள் இல்லாத வெற்றிடம் இருப்பதாக கூறப்படுகிறது

அப்பல்லோ பிரதாப் ரெட்டி மருத்துவமனையில் அனுமதி

அப்பல்லோ மருத்துவமனை குழுவின் தலைவர் பிரதாப் ரெட்டிக்கு திடீரென நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருடைய அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 30ல் சமந்தாவின் அடுத்த படம் ரிலீஸ்

கோலிவுட் திரையுலகில் கடந்த சில நாட்களாக வேலைநிறுத்தம் நடைபெற்று வருவதால் மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.