பாலா படம் குறித்த மாஸ் தகவலை வெளியிட்ட சூர்யா: கொண்டாடும் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Monday,March 28 2022]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் குறித்த மாஸ் தகவலை சூர்யா தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

சூர்யா நடித்து தயாரிக்கும் ’சூர்யா 41’ என்ற திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்க இருக்கிறார் என்பதும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இன்று முதல் பாலாவின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் 18 ஆண்டுகளுக்கு பின்னர் பாலா ‘ஆக்சன்’ என்று கூறுவதை அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன் என்றும் உங்களுடைய அனைவரும் வாழ்த்துக்கள் தேவை என்றும் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .

இதனையடுத்து இன்று முதல் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக தொடங்கிவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

More News

விருது வாங்கியபோது திடீரென தொகுப்பாளர் கன்னத்தில் அறைந்த வில்ஸ்மித்: வைரல் வீடியோ

ஆஸ்கார் விருதை வாங்க மேடைக்கு சென்ற நடிகர் வில் ஸ்மித் திடீரென தொகுப்பாளர் கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

டென்னிஸ் சகோதரிகளின் வாழ்க்கை வரலாறு படம்: சிறந்த நடிகர் விருதை பெற்ற வில்ஸ்மித்!

அமெரிக்காவின் டென்னிஸ் சகோதரிகளின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். 

2022ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதுகள்: ஒரே படத்திற்கு 6 விருதுகள்!

2022 ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்று வரும் நிலையில் இதில் 'டூன்' என்ற திரைப்படம் 6 விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தேர்தல் அல்ல, சினிமா: 'பீஸ்ட்' - 'கேஜிஎஃப் 2' மோதல் குறித்து யாஷ்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' மற்றும் பிரபல கன்னட நடிகர் யார் நடித்த 'கேஜிஎஃப் 2'ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில்

'ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கு யுவன்ஷங்கர் ராஜா போட்ட ஆட்டம்: வைரல் வீடியோ!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் சமீபத்தில் வெளிவந்த நிலையில் இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடனமாடிய வீடியோ