இயக்குனர் சிம்புதேவனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,May 20 2019]

வடிவேல் நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' மற்றும் விஜய் நடித்த 'புலி' உள்பட ஒருசில படங்களை இயக்கிய சிம்புதேவன், இயக்குனர் வெங்கட்பிரபுவின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவலை இன்று இரவு 7 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிடவுள்ளார். வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்கும் இந்த படத்தில் பல ஆச்சரியங்கள் காத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை பிளாக் டிக்கெட் கம்பெனியுடன் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றது.

இதுகுறித்து இயக்குனர் சிம்புதேவன் தனது சமூக வலைத்தளத்தில் 'உங்கள் அனைவரும் ஆசியால் எனது அடுத்த பயணம் தொடங்கிவிட்டது. சூர்யா, வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ஆகியோர்களுக்கு எனது நன்றி' என்று தெரிவித்துள்ளார்.
 

More News

கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு: மதுரை ஐகோர்ட் தீர்ப்பு

இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாக அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது

17 வருடமாக இரண்டு கால்களை இழந்து இலவச மருத்துவம்! பெண் டாக்டரை கொண்டாடும் மக்கள்!

அனைத்து தொழில்களும் பணத்தை மட்டுமே மையமாக வைத்து இயங்கும் இந்த காலகட்டத்தில்,  கடந்த 17 வருடமாக இரண்டு கால்களை இழந்த நிலையிலும், மக்களுக்காக சேவை செய்து வருகிறார்...

கடமை தான் முக்கியம்! கல்யாணத்தை தள்ளி வைத்த தம்பதிகள்!

நேற்றைய தினம் இமாச்சலப் பிரதேசம் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் நாடாளு மன்ற தேர்தல் 7 ஆவது கட்டமாக நடந்து முடிந்தது...

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் சூர்யா?

இயக்குனர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் இதுவரை 'சென்னை 600028 2' மற்றும் 'ஆர்.கே.நகர்' ஆகிய இரண்டு படங்களை தயாரித்துள்ளது.

விஐபி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு: பிரபல நடிகை கணிப்பு

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நேற்றுடன் முடிந்துவிட்ட நிலையில் தேசிய, மாநில ஊடகங்கள் நேற்று மாலை முதல் தங்களது எக்சிட்போல் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.