ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த சூர்யா: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,January 25 2021]

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்கள் அவ்வப்போது தங்களது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர்களுடைய குடும்ப விசேஷங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ரசிகர்களுக்கு மதிப்பளித்து அவர்களது குடும்பத்தில் நடைபெறும் விசேஷங்களில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி அளிக்கும் நடிகர்களில் ஒருவர் சூர்யா என்பது தெரிந்ததே

நடிகர் சூர்யா சமீபத்தில் ரசிகர் ஹரி என்பவரின் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மணமகனின் தோளில் கையை போட்டுக்கொண்டு அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் தொடர் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை முடித்துவிட்டு ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது