இந்த வாரம் வெளியாகும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாலகுமாரன் மகன்: என்ன காரணம்

  • IndiaGlitz, [Sunday,April 24 2022]

இந்த வாரம் 'பயணிகள் கவனிக்கவும்’ என்ற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் தனது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சக்திவேல் என்பவர் இயக்கத்தில் விதார்த், லட்சுமிபிரியா, சந்திரமவுலி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ’பயணிகள் கவனிக்கவும்’. ஏப்ரல் 29ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு தனது எதிர்ப்பை பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் பதிவு செய்து உள்ளார். அவர் அதில் கூறி இருப்பதாவது:

பயணிகள் கவனிக்கவும் என்பது எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய ஒரு மிகச்சிறந்த புத்தகம். It is easily one of his best. Airport கதைக்களம். விருது வாங்கிய புத்தகம். அப்பாவின் உழைப்பு, ஒவ்வொரு நாளும் விமான நிலையம் சென்று அங்குள்ளவர்களிடம் பேசி பழகி உருவாக்கிய படைப்பு. இதைப் படமாக்க வேண்டும்மென்பது எனது கனவு.

முன்பு இட்ட ஒரு பதிவில் குறிப்பிட்டது போல, அப்பா பாலகுமாரன் எழுதிய அனைத்து படைப்புகளின் சம்மந்தமான காப்பிரைட்ஸ் , சட்டப்படி என்னுடைய பொருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளேன். அது நாளிதழிலும் செய்தியாக வந்தது. என்னுடைய சுய நினைவவுக்குத்தெரிந்து இந்த டைட்டிலை எங்கள் படத்திற்கு வைத்துக்கொள்ளலாமா என்று என்னிடமோ எங்கள் குடும்பத்தாரிடமோ யாரும் கேட்கவில்லை. ஒரு கர்டஸி கால்? ஒரு கடிதம்? சிரித்த முகத்துடன் ஒரு வின்னப்பம்? எதுவும் இல்லை. மிகவும் நெருக்கமான பலர் இதில் சம்மந்தப்பட்டிருந்தாலும் என்னிடம் இதைப்பற்றி பேசவில்லை.
சப்பகட்டு கட்டாத,….அதெல்லாம் செல்ஃபே எடுக்காது...பயனிகள் கவனிக்கவும் என்பது ஒரு பொதுச்சொல் என்று மல்லுகட்டினால், இந்தப் பொய் எத்தனை பெரியது என்று சொல்பவர்களுக்கே தெரியும்.

சற்று நாட்கள் முன்னால் வெளிவந்த சில நே*** சில ம***** படத்திற்கும் அனுமதியில்லாமல் படத்தலைப்பு எடுத்துக்கொள்ளப்பட்டது என்று ஒரு செய்தி கேளிவ்ப்பட்டேன். பின் நடிகர் ஒருவர் எழுத்தாளாரின் குடும்பத்தாரிடம் கேட்டுக்கொண்டதால் அவர்கள் ஒப்பக்க்கொண்டதாகவும் கேள்விப்பட்டேன். சில நே**** சில ம**** பொதுச்சொல்லா? நாளை வேள்பாரி என்ற தலைப்பை யாருக்கும் தெரியாமல் கவுன்ஸிலில் பதிவு செய்துவிட்டு, என்ன படம் வேண்டுமானாலும் எடுக்கலாமா? மனசாட்சி தடை சொல்லாதா? சுட்டெரிக்காதா? (எழுத்தாளர்கள் கவனிக்கவும்).

எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய பயணிகள் கவனிக்கவும் மிகவும் பிரபலாமான ஒரு படைப்பு, 1993 ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து அன்று முதல் இன்று வரை பத்து பதிப்புகளுக்கு மேல் வந்த ஒரு சக்ஸஸ்ஃபுல் புத்தகம். இதை நானும் எனது நண்பர்களும் சீன் வாரியாக பிரித்து, வரி வரியாக வசனங்களக மார்க் செய்து, கதாபாத்திரங்களாக பிரித்து அவர்களுக்கு வடிவம் கொடுத்து வைத்துள்ளோம். என்றோ ஒரு நாள் உயிர் வரும் என்ற கணவுடன். பாலாவின் “ பயணிகள் கவனிக்கவும்” என்னுடன் சேர்ந்து என் கனவுகளுடன் சேர்ந்து நிச்சயமாக வளரும், ஒரு நாள் வெளிவரும். ஆனால் அந்த கனவுப்படைப்புக்கு, அந்த திரைப்படத்திற்கு இப்பொழுது என்ன பெயர் வைப்பது? யார் கேட்பினும் பதில் கிட்டுமா?

கீழே இருக்கும் படத்திற்கும் என் அப்பா பாலகுமாரன் எழுதிய புத்தகத்திற்கும் எந்த வித சம்மந்தமும் இருக்காது என்று நம்புகிறேன். மலையாள படத்தின் ரீமேக் என்று தெரியவந்தது. இருப்பினும் இந்த டைட்டிலை உங்களின் படத்திற்கு வைப்பதற்கு என்ன காரணம்? விளக்கம் கிடைக்குமா? பெரிய நடிகர் பேசுவாரா? யார் பேசினாலும் சட்ட ரீதியாக அணுகலாம் என்று நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.

More News

ரூ.200 கோடி சாதனை ஒரு பக்கம் இருக்கட்டும், 'பீஸ்ட்' செய்த இன்னொரு சாதனை தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் 200 கோடி வசூல் செய்த சாதனை ஒரு பக்கம் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் சத்தமில்லாமல் மற்றொரு சாதனை செய்துள்ளது 

அஜித்-ஷாலினியின் 22வது திருமண நாள்: வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

நடிகர் அஜித் மற்றும் ஷாலினியின் 22 வது திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் வரையில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'பீஸ்ட்', 'கேஜிஎஃப் 2' படங்களை அடுத்து இந்த வாரம் ரிலீஸாகும் 3 படங்கள்!

கடந்த இரண்டு வாரங்களாக 'பீஸ்ட்' மற்றும் 'கேஜிஎஃப் 2' திரைப்படங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் ஆக்கிரமித்துள்ள நிலையில் இந்த வாரம் 3 புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன

தோளை சிலுப்பி க்யூட்டா நடனம் ஆடிய தல தோனி… வைரலாகும் வீடியோ!

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரருமான தல தோனி சக வீரரின் திருமணத்தில் வேட்டி அணிந்து,

நடிகர் மனோபாலா, பூச்சி முருகனுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கிய சிறப்பு கௌரவம்!

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், நகைச்சுவை கலைஞர் எனப்பல துறைகளிலும் முத்திரை பதித்திருக்கும்