'விக்ரம்' படத்தில் சூர்யா நடித்திருப்பது உண்மையா?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் சூர்யா இந்த படத்தில் நடித்து இருப்பது உண்மைதான் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி கசிந்துள்ளது. மேலும் சூர்யா தோன்றும் காட்சியில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர்களும் உடன் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ திரைப்படத்தின் சில காட்சிகள் ’விக்ரம்’ படத்தின் கதை உடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் எந்த அளவுக்கு உண்மை என்பதை படம் வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜூன் தாஸ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அனிருத் இசையில், கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், பிலோமினாராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

More News

இருட்டு நெஞ்சுக்குள்ள நீரடிக்க: பட்டாம்பூச்சி படத்தின் பாடல் வரிகள்!

சுந்தர் சி நடிப்பில் பத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டாம்பூச்சி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினி உதவியாளர், நயன்தாரா படம்: தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் விளக்கம்!

தோனி ஆரம்பிக்க இருக்கும் தயாரிப்பு நிறுவனத்தை ரஜினியின் முன்னாள் உதவியாளர் சஞ்சய் நிர்வகிக்க போவதாகவும், இந்த நிறுவனத்தின் முதல் படம் நயன்தாரா நடிக்கும் படம் என்றும் செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் விக்னேஷ் சிவன்!

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசை விமர்சித்து பாடல்: கமல் மீது காவல்துறை ஆணையத்தில் புகார்

கமல்ஹாசனின் 'விக்ரம் 'படத்தின் 'பத்தல பத்தல' பாடல் நேற்று வெளியான நிலையில் இந்த பாடலில் ஒன்றிய அரசு என்று இருந்த வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது

'தலைவர் 169' படத்தில் நடிப்பது உண்மையா? சிவகார்த்திகேயன் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 169' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அது மட்டுமின்றி ஒரு பாடல் எழுத இருப்பதாகவும் தகவல்கள்