ஆர்கே செல்வமணி கேட்ட அடுத்த நிமிடமே அள்ளி கொடுத்த சூர்யா குடும்பம்

  • IndiaGlitz, [Monday,March 23 2020]

பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் சற்றுமுன் வெளியிட்ட அறிக்கையில் வேலைநிறுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நடிகர் நடிகையர் உள்பட திரையுலகை சேர்ந்த அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஆர்கே செல்வமணியின் அறிக்கை வெளிவந்த ஒருசில நிமிடங்களில் சிவகுமார், சூர்யா, கார்த்தி சார்பில் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. சூர்யா குடும்பத்தினர்களை அடுத்து முன்னணி நடிகர், நடிகையர் பலரும் பெப்சி தொழிலாளர்களுக்கு நன்கொடை வழங்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா என்பது ஒரு குடும்பம் என்று அனைத்து நட்சத்திரங்களும் கூறி வரும் நிலையில் குடும்பத்தில் உள்ள ஒரு பிரிவினர் கஷ்டப்படும்போது இன்னொரு பிரிவினர் கைகொடுத்து மனிதநேயம் காக்க வேண்டும் என்பதே அனைத்து தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது

More News

கொரோனா எதிரொலி; இத்தாலிக்கு உதவிக்கரம் நீட்டிய கியூபா!!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி இந்நூற்றாண்டில் பெரிய எண்ணிக்கையிலான இழப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனாவால் செத்தாலும் பரவாயில்லை: ஒரு லைட்மேனின் வேதனைக்குரல்

கொரோனாவால் திரையுலகமே முடங்கியிருக்கும் நிலையில் சினிமாவில் பணிபுரியும் அன்றாட கூலி வாங்கி பிழைப்பு நடத்தும் தொழிலாளிகள் தற்போது குடும்பத்துடன் பசியும் பட்டினியுமாக உள்ளனர்

கொரோனா பயத்தில் மூலிகை மருந்து சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மனித இனத்தையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் இந்த வைரஸால் ஆயிரக்கணக்கான உயிர்களும் பலியாகி உள்ளது.

கொரோனா எதிரொலி: வங்கி செயல்படும் நேரம் திடீர் மாற்றம்

கொரோனா வைரஸ் எதிரொலியாக பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படும், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பலர் வீட்டிலிருந்தே பணி செய்து வருகின்றனர்

கொரோனவை குணப்படுத்தும் Cuban Interferon Alpha 2B மருந்து எப்படி செயல்படுகிறது??? பின்னணி என்ன???

சீனாவில் கோரோனா வைரஸ் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. அந்நாட்டு மருத்துப் பணியாளர்கள், அரசு போன்றோர்களின் தீவிர உழைப்பினால் இது