நாளை 'ஜெய்பீம்' ரிலீஸ்: இன்று ரூ.1 கோடி நிதியுதவி செய்த சூர்யா!

  • IndiaGlitz, [Monday,November 01 2021]

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில் இன்று தமிழக முதல்வரிடம் சூர்யா ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படம் பழங்குடியின மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் குறித்து பேசப்பட்டு உள்ளன என்பதும் இந்த படத்தின் டீஸர் டிரைலர் ஆகியவை மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் இடம் ரூபாய் ஒரு கோடி நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் அளித்துள்ளார்

நாளை வெளியாக இருக்கும் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் பேசப்பட்ட நிலையில் அந்த இன மக்களுக்காக ரூபாய் ஒரு கோடி நிதி அளித்து உள்ள சூர்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நீ பிரச்சனையை கிளப்புறதுக்குன்னே இருக்கியா? பிரியங்காவிடம் ஆவேசமாக மோதும் இமான்!

 நீ பிரச்சினையை கிளப்ப வேண்டும் என்று முடிவு செய்து விட்டாயா என பிரியங்காவிடம் இமான் அண்ணாச்சி ஆவேசமாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்… விளாசும் முன்னாள் வீரர்!

டி20 உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை இந்தியா நழுவவிட்டு இருக்கிறது.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ!

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி  இயக்கத்தில் உருவாகி வந்த 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த்சிங் ராஜ்புத் முன்னாள் காதலிக்கு திருமணம்: தொழிலதிபரை மணக்கின்றார்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடைய முன்னாள் காதலிக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் என்றும் அவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

புனித் ராஜ்குமார் பொறுப்பை இனி நான் ஏற்று கொள்கிறேன்: விஷால் அறிவிப்பு!

சமீபத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற நிலையில் அவருடைய பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என பிரபல தமிழ் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.