சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்: அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,January 14 2022]

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் 3வது சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற ’சும்மா சுர்ருன்னு வருது’ என்ற பாடல் வரும் 16ஆம் தேதி ஞாயிறு மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் டி.இமான் இசையமைப்பில் அமரன் மாலிக் மற்றும் நிகிதா காந்தி பாடிய இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் பாடல்கள் எழுதி வரும் சிவகார்த்திகேயன் தற்போது சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் பாடல் எழுதியுள்ளார்

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

More News

ஆரோக்கியத்துக்கு மிஞ்சின மருந்து இல்லை: ரஜினியின் பொங்கல் வாழ்த்து!

தை முதல் நாளான இன்று தமிழர்கள் அனைவரும் பொங்கல் திருவிழாவை கொண்டாடி வரும் நிலையில் பொங்கல் நல்வாழ்த்துக்களை அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர் 

’மாஸ்டர்’ படத்தின் மாஸ் பயணம்: படக்குழுவினர் வெளியிட்ட 4 நிமிட வீடியோ!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டதை அடுத்து படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்

சூர்யா, கார்த்தி ரசிகர்களுக்கான பொங்கல் விருந்து அறிவிப்பு!

 நாளை பொங்கல் தினத்தில் சூர்யா மற்றும் கார்த்தி நடித்த திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் அவர்களது ரசிகர்களுக்கான சிறப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

தனுஷின் 'மாறன்' ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடித்த 'மாறன்' படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

கொரோனா 3 ஆவது அலை முடிவுக்கு வருமா? மூத்த விஞ்ஞானி கூறிய பதில்!

இந்தியாவில் கொரோனா 3 ஆவது அலை துவங்கிவிட்டதை மத்திய